வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

NTUC launches engagement exercise to workers
Photo: Today

சிங்கப்பூரில் நேற்று (17/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, புதிதாக 412 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 377 பேருக்கு பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 371 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 35 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,384 அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த இத்தாலி!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 809 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, 481 மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 60 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 35 பேர் ஐ.சி.யூவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 2 பேரின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 570 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.