சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

சிங்கப்பூரர்கள் மற்றும் நாட்டிற்குத் திரும்பும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்படும் என்று அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 18) தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் மனரீதியாகத் தயாராக இருக்கவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் துவாஸ் தொழிற்சாலைப் பகுதியில் தீ விபத்து..!

இதில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அனுமதி அட்டை கொண்டோர், குறுகிய கால வருகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த கட்டாய உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 20) இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்திவைக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் சம்பவங்கள் அதிகரிப்பதை தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்றுவரை, சிங்கப்பூரில் மொத்தம் 313 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில் நேற்று மட்டும் (மார்ச் 18) வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் 33 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சிங்கப்பூரர்கள் 30 பேர் அடங்குவர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 300ஐ தாண்டியது..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil