சிங்கப்பூரில் புதிதாக 618 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

618 new Covid-19 cases in Singapore, taking total to 12,693
618 new Covid-19 cases in Singapore, taking total to 12,693

சிங்கப்பூரில் நண்பகல் (ஏப்ரல் 25) நிலவரப்படி, புதிதாக 618 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,693ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 7 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.