சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒன்பது பேர் உயிரிழப்பு

Singapore reports COVID-19
(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 5) நிலவரப்படி, புதிதாக 3,486 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் புதிதாக ஒன்பது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் வர அனுமதி

அதில் 64 முதல் 90 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர்.

அவர்களில் மூன்று பேர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இரண்டு பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள் என்றும், மற்ற நான்கு பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனியார் வீடுகளை வாடகைக்கு வழங்கிய இருவர் மீது குற்றச்சாட்டு