சிங்கப்பூரில் உள்நாட்டில் ஒருவர் உட்பட புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி!

Singapore Covid-19 cases update apr7
(Photo: NEA / FB)

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் சமூக அளவில் ஒரு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, தங்கும் விடுதியில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

மே 1 முதல் சிங்கப்பூர் வரும் பயணிகள் இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தலாம்!

மீதமுள்ள அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்றும் அது கூறியுள்ளது.

அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் உள்ளனர் அல்லது தனிமையில் வைக்கப்பட்டனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 60,554ஆக உள்ளது.

கூடுதல் தகவல் இன்றிரவு வெளியிடப்படும் எனவும் MOH குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படுமா?