தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் உதவி!

2024 public-holiday-singapore
Photo: holidify

COVID-19 தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் உதவ முன்வந்துள்ளது.

அத்தகைய நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முயற்சிகளில் சிங்கப்பூர் ஆதரவளிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்று (மார்ச் 31) தெரிவித்துள்ளது.

பொங்கோலில் S$72,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – ஆடவர் ஒருவர் கைது

COVID-19 மேம்பாட்டு முயற்சிக்கு சிங்கப்பூர் US$19.6 மில்லியன் அமெரிக்க டாலர் (S$26.4 மில்லியன்) வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சோமாலியாவின் கடன் நிவாரணத்திற்காக கூடுதலாக US$970,000 நிதியை சிங்கப்பூர் வழங்க திட்டமிட்டுள்ளது.

தற்போதைய COVID-19 தொற்றுநோயிலிருந்து உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு ஆதரவு அளிப்பதில் சிங்கப்பூர் வலுவான அக்கறை கொண்டுள்ளது என்று MAS ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

நார்த் பிரிட்ஜ் சாலையில் விபத்து: ஆடவர் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது..!