COVID-19: 16,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்..!

Singapore COVID-19 recovered cases
A total of 16,289 are isolated and cared for at community facilities. These are those who have mild symptoms, or are clinically well but still test positive for COVID-19.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மீண்டு 62 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 1,519 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 605 பேர் பாதிப்பு…!

மேலும் 1,584 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும் 16,289 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 40 போலி செய்திகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது : அமைச்சர் S. ஈஸ்வரன்..!