சிங்கப்பூர் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக 61 பேர் மீண்டுள்ளனர்; மொத்தம் 1,408 ஆக உயர்வு..!

Singapore covid-19 recovered cases
Singapore covid-19 recovered cases

சிங்கப்பூரில் நேற்றைய (மே 3) நிலவரப்படி, COVID-19 தொற்றிலிருந்து மீண்டு 61 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 1,408 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 626 பேர் பாதிப்பு..!

மேலும் 1,630 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும் 15,149 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!