சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி!

(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிறுவனை கீழே தள்ளி, காலால் மிதித்து துன்புறுத்திய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் உள்ளனர் அல்லது தனிமையில் வைக்கப்பட்டனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில், சமூக அளவில் மற்றும் தங்கும் விடுதியில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 60,495ஆக உள்ளது.

கூடுதல் தகவல் இன்றிரவு வெளியிடப்படும் எனவும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 26வது மாடியிலிருந்து விழுந்த 2 சிறுமிகள் மரணம்