கடந்த 16 நாட்களில் பதிவான உள்நாட்டில் முதல் தொற்று பாதிப்பு!

Singapore COVID-19
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்றைய (நவ. 26) நிலவரப்படி, புதிதாக 5 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

COVID-19: விதிகளை மீறிய 6 பேருக்கு தலா S$3,000 அபராதம் விதிப்பு!

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சமூக பரவல்

புதிய பாதிப்புகளில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த 16 நாட்களில் உள்நாட்டில் பரவும் முதல் தொற்று பாதிப்பு இதுவாகும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள் எதுவும் பாதிவாகவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,195ஆக உள்ளது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்

டிசம்பர் மாதத்திற்கான இந்தியா-சிங்கப்பூர் செல்லும் இருவழி விமானங்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…