சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த புதிய இடங்கள்..!

Singapore COVID-19 Update
(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

அதில் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள நான்கு மால்கள் உட்பட சில இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் நேற்று (அக் .26) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் சிறப்பு திட்டத்தின் 7வது கட்டம் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்குகிறது..!

கிருமித்தொற்று பாதித்த நபர்கள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ION Orchardக்கு சென்றுவந்துள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதே போல Mandarin Gallery, 313@somerset மற்றும் Orchard Central ஆகிய இடங்களுக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சென்றுவந்துள்ளனர்.

பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்ற மால்கள்:
  • Tampines Mall
  • Paya Lebar Quarter Mall
  • Kallang Wave Mall
  • Lot One Shoppers’ Mall
பட்டியலில் சில உணவகங்களும் இடம்பெற்றுள்ளன:
  • Kopitiam at Our Tampines Hub,
  • McDonald’s @ Tampines Interchange
  • Kimly Zi Char at 742A Tampines Street 72

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கலவரம் செய்ததாக 6 ஆண்கள், 6 பெண்கள் கைது..!

Table : MOH

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட நாட்டிற்கு அக்டோபர் 25 முதல் கூடுதல் விமானங்கள் – ஏர் இந்தியா..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…