சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

Singapore COVID-19 visited places
(Photo: TODAY)

COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

இதில் Northpoint சிட்டி மற்றும் Tampines Mall ஆகிய இடங்களை அந்த பட்டியலில் அமைச்சகம் சேர்த்துள்ளது.

12 பேருடன் உணவகத்திற்கு சென்ற புதிதாக பாதிக்கப்பட்ட தொற்று நோயாளி!

நோயாளிகள் முன்னர் சென்றுவந்த நேரம் மற்றும் இடங்கள்:

நவம்பர் 14ஆம் தேதி இரவு 7.15 மணி முதல் இரவு 7.50 மணி வரை, 598 யிஷுன் ரிங் சாலையில் Wisteria Mall.

நவம்பர் 15ஆம் தேதி மாலை 5.10 மணி முதல் மாலை 5.50 மணி வரை, Northpoint City-இல் உள்ள Jinjja Chicken உணவகம்.

நவம்பர் 21ஆம் தேதி மாலை 5.45 மணி முதல் இரவு 8.55 மணி வரை, Tampines Mall-இல் Seoul Garden உணவகம்.

நவம்பர் 23 அன்று மதியம் 12.10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை பிளாக் 476 தெம்பனிஸ் ஸ்டிரீட் 44 இல் Mr Prata உணவகம்.

ஆரோக்கியத்தை கவனிக்கவும்

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி இனி DBS வங்கி கிளைகளாக செயல்படும்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…