சிங்கப்பூரின் மிகப்பெரிய தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு..!

(Photo: MOM)

சிங்கப்பூரின் மிகப்பெரிய தங்கும் விடுதியில் கிருமித்தொற்று பாதிப்பு இல்லாததால் தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கே தெங்கா லாட்ஜில், கடந்த 28 நாட்களில் புதிய கிருமித்தொற்று பாதிப்புகள் எதுவும் தொடர்பில்லாததால் அது தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று இரவு (அக். 19) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலையிடத்தில் மின்சாரம் பாய்ந்து இந்திய ஊழியர் மரணம்..!

சுமார் 16,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட அந்த சுங்கே தெங்கா லாட்ஜில் புதிய நோய் பரவல் குழுமம் கடந்த ஆகஸ்ட் 22 அன்று அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 22 அன்று, 500 பழைய சோவா சூ காங் (Old Choa Chu Kang) ரோட்டில் உள்ள இந்த தங்கும் விடுதியில் இரண்டு நபர்களுக்கு 55 பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருந்ததாக MOH தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 4,800 ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பு வழங்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகள் 216ஆக அதிகரித்தது, அங்கு கடைசியாக செப்டம்பர் 19 அன்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன் பின்னர், புதிய பாதிப்புகள் எதுவும் அங்கு தொடர்புப்படுத்தப்படவில்லை.

சிங்கப்பூரில் COVID-19 பாதிப்புகளின் பெரும்பகுதி தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையது.

முதல் இரண்டு பாதிப்பு கடந்த மார்ச் 29 அன்று பதிவாகியதில் இருந்து, சுமார் 54,000க்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் தங்கும் விடுதிகளில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியை மூட உத்தரவு – உணவு விற்பனை நிலையங்களுக்கு அபராதம்..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…