சிங்கப்பூரில் ஆக்சிஜன் தேவைப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Pic: Juan Monino vía Getty Images

சிங்கப்பூரில் ஆக்ஸிஜன் தேவைப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 30 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் புதிதாக 5 கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம்

மேலும், மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும், கவலைக்கிடமான நிலையில் உள்ள அல்லது ஆக்ஸிஜன் தேவைப்படும் 33 பேரில் ஒருவர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என அமைச்சகம் கூறியுள்ளது.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 24 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 23 பேர் தடுப்பூசி போடவில்லை அல்லது ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 572 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

‘சூதாட்டத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறைவு’- ‘NCPG’ ஆய்வில் தகவல்!