கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம்!

(Photo by David GRAY / AFP)

மலேசியா- சிங்கப்பூருக்கு இடையிலான பயணங்களை எளிதாக்கும் வகையில் கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம் தொடங்கவுள்ளது.

அதன் அடிப்படையில், மரணம் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட சொந்தங்களை காண இரு நாட்டினரும் பயணம் மேற்கொள்ளலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள்

இந்த கருணை அடிப்படையிலான பயணம் மே 17ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயணங்களுக்கான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் ஆகியோரின் கூட்டு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்தியாவசிய எல்லை தாண்டிய பயணத்தை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் 14 பேர் பாதிப்பு – 11 பேர் டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்பு