சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்

Chin Min Daily News and TikTok

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழலில், கடந்த சில நாட்களாக பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூரில் நேற்று (செப். 13) புதிதாக 597 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, அதற்கு முன்னர் சைனாடவுன் காம்ப்ளெக்ஸில் புதிய குழுமம் அடையாளம் காணப்பட்டது.

பெரிய ஆமையின் கழுத்தை கடித்து கிழித்து வேட்டையாடும் பெரிய உடும்பு

இந்நிலையில், பெரும் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பாதுகாப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கவலை எழுப்பினர்.

அட்மிரால்டி பேருந்து நிறுத்தத்தில் எடுக்கப்பட்ட காட்சி:
Photo Credit: Shin Min Daily News

புகைப்படம் எடுத்த நபர் அதனை ஷின் மின் செய்தியுடன் பகிர்ந்துகொண்டார்.

பரபரப்பான நேரங்களில், 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் பொதுப் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட போக்குவரத்துக்காகக் காத்திருக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Photo: Complaint Singapore/Facebook

இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதன் மூலமே, இந்த தோற்று நோயை முழுமையாக விரட்ட முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தங்கும் விடுதியில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு – புதிய குழுமம் அடையாளம்