உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தரவரிசையில் சிங்கப்பூர்..!

Singapore declared Southeast Asia’s most ‘powerful’ nation

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தரவரிசையில் சிங்கப்பூர் இடம் பிடித்துள்ளது.

இந்த உலக தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் 22வது இடத்தை பிடித்துள்ளது, மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.எஸ். நியூஸ் மற்றும் வேர்ல்ட் ரிப்போர்ட் (U.S. News and World Report’s) வருடாந்திர தரவரிசைப்படி, ஆற்றல் மற்றும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டும், மேலும் உலகளவில் 20,000க்கும் மேற்பட்டவர்களின் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது, இரண்டாம் இடத்தை ரஷ்யாவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளது.

மேலும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் ஜெர்மனி மற்றும் UK உள்ளது. இதில் இந்தியா பதினான்காம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்க ஊடக நிறுவனத்தின்படி, மிக சக்திவாய்ந்த 30 நாடுகளின் பட்டியல்:

  1. அமெரிக்கா
  2. ரஷ்யா
  3. சீனா
  4. ஜெர்மனி
  5. UK
  6. பிரான்ஸ்
  7. ஜப்பான்
  8. இஸ்ரேல்
  9. தென் கொரியா
  10. சவூதி அரேபியா
  11. ஐக்கிய அரபு நாடுகள்
  12. கனடா
  13. சுவிச்சர்லாந்து
  14. இந்தியா
  15. ஆஸ்திரேலியா
  16. துருக்கி
  17. இத்தாலி
  18. கத்தார்
  19. ஸ்பெயின்
  20. ஸ்வீடன்
  21. நெதர்லாந்து
  22. சிங்கப்பூர்
  23. நார்வே
  24. பிரேசில்
  25. எகிப்து
  26. டென்மார்க்
  27. ஆஸ்திரியா
  28. உக்ரைன்
  29. நியூசிலாந்து
  30. லக்சம்பர்க்