சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 34,000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு – தடுப்பு பொருட்கள் வழங்கல்!

Singapore Dengue prevention campaign
Dengue prevention campaign

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதி காலகட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) புதிய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 34,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்!

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் நேற்று வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பேடோக்கிலுள்ள Jalan Chempaka Putehவில், NEAஇன் புதிய டெங்கு தடுப்பு தொகுப்பை குடியிருப்பாளர்களுக்கு அவர் விநியோகம் செய்தார்.

சிங்கப்பூரில் சுமார் 75,000 வீடுகளுக்கு அந்த டெங்கு தடுப்பு தொகுப்பை விநியோகிக்கும் திட்டத்தை கடந்த வியாழக்கிழமை NEA அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டெங்கு காய்ச்சல் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், மேலும் ஆண்டு இறுதிக்குள் அதைச் சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் திரு டான் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…