சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு முன்பு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது…

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு முன்பு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த மதிப்பானது மலேசிய ரிங்கிட்க்கு நிகராக கடந்த 17 மாதம் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கடன் காரணமான அந்நாட்டின் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து காணப்பட்டது. அச்சமயம் ஒரு சிங்கப்பூர் வெள்ளி மலேசியா ரிங்கிட் உடன் ஒப்பிடுகையில் 3.0632 ஆக இருந்தது. 2017 ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இதுவே மிக உயர்ந்த அளவாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் வெள்ளியின் இந்த மதிப்பு மலேசியா ரிங்கிட்டை விட 0.74 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும் சென்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.