சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு ஆகியவற்றில் புதிய விதிமுறைகள்..!

Singapore dorms design and facilities
Singapore dorms design and facilities (Photo: NYTimes)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதலாக தங்கும் இட வசதிகளை அமைப்பது மட்டுமல்லாது, அதற்கான புதிய விதிமுறைகளையும் தேசிய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் வைரஸ் தொற்றைக் கையாளத் தேவையான அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புற்றுநோயால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர்; கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூரர்கள்..!

நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளே ஊழியர்களைக் குடியமர்த்த ஆக உகந்த வசதி என்று அந்த அமைச்சகங்கள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது.

இந்த விதிமுறைகளில், தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும். மேலும், தனியார் குத்தகைதாரர்களிடம் விடப்படும் தங்கும் விடுதிக் கட்டமைப்பை அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 4.5 சதுர மீட்டர் இட அளவு 6 சதுர மீட்டருக்கு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் அறையிலும் அதிகபட்சமாக 10 படுக்கைகளை மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும். தற்போது அதற்கான எந்த விதிமுறைகளும் இல்லை, சராசரியாக ஒவ்வோர் அறையிலும் 12 முதல் 16 படுக்கைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் கீழ் ஓரடுக்குக் கட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அவற்றுக்கு இடையில் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தற்போது 15 பேருக்கு இருக்கும் ஒரு கழிப்பறைக்குப் பதிலாக 5 பேருக்கு ஒரு கழிப்பறை ஒதுக்கப்படும் என்று செய்தி மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட சில சேவைகளை மீண்டும் தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர்..!