இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்துதல் இல்லை!

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

தைவானில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகள் நாளை (ஆகஸ்ட் 7) நள்ளிரவு முதல் தளர்த்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது, தைவானில் இருந்து வரும் பயணிகள் அவர்களின் வருகையின்போது PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்தபிறகும் மீண்டும் ஒரு PCR பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

10 புதிய COVID-19 தொற்றுக் குழுமங்கள் – மொத்த எண்ணிக்கை 122…

இந்நிலையில், தைவானில் கொரோனா தொற்று நிலவரம் மேம்பட்டு வரும் காரணத்தால், தைவானில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளை (ஆகஸ்ட் 07) நள்ளிரவு (11: 59) முதல், தைவானிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூர் வந்தவுடன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால், 2 வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கிருமித்தொற்று பரவும் அபாயத்தை கையாள சிங்கப்பூர் தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து காலத்துக்கேற்ப மாற்றியமைக்கும் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் புன்னகைக்கு காரணமான புகைப்படம் – (காணொளி)