‘இந்தியா தனது ஆகச்சிறந்த மகள்களில் ஒருவரை இழந்துவிட்டது’ – அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

Singapore external affairs minister vivian balakrishnan condolence sushma swaraj death
Singapore external affairs minister vivian balakrishnan condolence sushma swaraj death

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக (ஆக.6) இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்.

இந்நிலையில், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் கமிஷன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜின் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதில், “இந்தியா தனது ஆகச் சிறந்த மகள்களில் ஒருவரை இழந்துவிட்டது. சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவை மிகச்சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களின் நலனில் அக்கறை கொண்ட அற்புதமான பெண் அரசியல்வாதியாக விளங்கினார்.

இந்திய மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. எங்கள் ஏராளமான உரையாடல்களின் நினைவுகளை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவேன். மிக ஆழமாக அவரை தவறவிடுகிறோம்.” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.