ஆஹா! எவ்ளோ பெரிய மீனு பாரு! – நீர்நாய்களை வசப்படுத்திய பெரிய மீன் இனங்கள்

சிங்கப்பூரின் கார்டன்ஸ் பை தி பேயில் உள்ள ‘Big Fish’ மீன் வளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அனைவரயும் ரசிக்கச் செய்துள்ளது.அக்வாரியத்தில் உள்ள மீன்களைக் கண்ட ஐந்து நீர்நாய்கள் வியப்பில் முழுமையாக மனதைப் பறிகொடுத்ததை வீடியோவில் காணமுடிகிறது.

சிங்கப்பூரில் நீர்நாய்கள் பற்றி ஆவணப்படுத்தும் ஆம்னி சேனல் என்ற முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியானது.அங்குள்ள மிகப்பெரிய மீன்களைக் கண்டதும் நீர்நாய்கள் அவற்றின் பின்னங்கால்களால் எழுந்து நின்றது.மீன்களை எட்டிப்பார்க்க முயற்சி செய்யும் போது அவைகள் அவ்வாறு செய்தது வீடியோவில் பதிவானது.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியான இந்த காணொளி பலரால் விரும்பி பகிரப்பட்டு வருகிறது.அவைகள் மிகப்பெரிய மீன்களை கண்ணாடி வழியாக பார்த்து வியந்தன.அங்கு பல்வேறு வகையான பெரிய மீன் இனங்கள் உள்ளன.

இந்த அக்வாரியத்தில் உள்ள மீன்கள் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் படுகையில் இருந்து பெரும்பாலும் வருகின்றன.தென் அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய நன்னீர் மீன் மற்றும் 2 மீ நீளம் வரை வளரக்கூடிய அராபைமா போன்ற மீன் இனங்களும் அக்வாரியத்தில் உள்ளன.
ஒவ்வொரு நீர்நாய் சுமார் 1 மீ முதல் 1.5 மீ வரை இருக்கும்.நீர்நாய்களின் விருப்ப உணவு மீன்கள் ஆகும்.மேலும்,நீர்நாய்கள் விலைமதிப்பற்ற, கவர்ச்சியான மீன்களை சாப்பிடுவது புதிதல்ல.