சிங்கப்பூரில் வீட்டிற்கு வெளியே தேசியக் கொடியைக் கட்டியுள்ளவர்கள் கவனத்திற்கு..!

Singapore flag display Fine
(PHOTO: Javann.sg)

சிங்கப்பூரில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டியுள்ள தேசியக் கொடியை, வரும் 30ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமைக்குப் (செப்டம்பர் 30) ​​பிறகு, கொடியைத் தொடர்ந்து வீடுகளுக்கு வெளியே கட்டிவைத்துள்ளவர்களுக்கு, S$1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தெம்பனிஸ் சந்திப்பில் சென்றுகொண்டிருந்த காரில் தீடீர் தீ..!

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, கொடி கம்பம் இல்லாமல் ஒரு கட்டிடத்திற்கு வெளியே அல்லது திறந்தவெளியில் கொடியைக் கட்டலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பரவிக்கொண்டிருந்த கோவிட் -19 தொற்றுநோயின் போது ஒற்றுமை அடையாளமாக ஏப்ரல் 25 முதல் செப்டம்பர் 30 வரை தேசிய கொடியைக் கட்ட அனுமதி காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கொடி நீண்ட நாட்களுக்கு காட்சிப்படுத்த அனுமதி கேட்டதாக கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) கூறியிருந்தது.

இந்நிலையில், தங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டியுள்ள தேசியக் கொடியை 30ஆம் தேதிக்குள் நீக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடங்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த அறிக்கை..!!

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…