தாயகம் சென்றால் சிங்கப்பூருக்கு திரும்பிவர முடியாமல் போய்விடுமோ.? – குழப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்.!

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்னர், வந்த திரு முத்து என்பவர், செனோக்கோவில் உள்ள தமது விடுதியிலிருந்து சண்டே டைம்ஸ் என்ற நாளிதழிடம் பேசியுள்ளார்.

திருச்சியில் உள்ள அவரின் குடும்பத்தாரை பார்க்க காணொளி அழைப்பு மூலமாகவே அவர் தொடர்பு கொள்கிறார். அடுத்த மாதம் மூன்று வயதாகும் தமது மகள் யாழினியை சந்திக்க முடியாததுதான் எனது மிகப்பெரிய ஏக்கம் என அவர் கூறினார்.

நான் எப்போது வீட்டிற்கு வருவேன் என ஒவ்வொரு நாளும் எனது மகள் என்னிடம் கேட்கிறாள். இந்தியாவுக்கு திரும்புவது மிகவும் எளிது. ஆனால், சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பி வருவது மிகவும் கடினமாகிவிடும் என எனது மனைவி, மகளிடம் கூறுவேன் என்றார். முத்து கடைசியாக 2019 ஆம் ஆண்டு தமது சொந்த ஊருக்குச் சென்றார்.

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆடவர் – இறந்த நிலையில் கண்டெடுப்பு

முத்துவிற்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். ஒவ்வொரு மாதமும் தமது குடும்பத்திற்கு S$1,000 அனுப்பி வைக்கிறார். சிறிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் முத்துவையும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களையும் கடந்த ஆண்டு ஜூலையில் கொரோனா தொற்றியது.

ஆனால், முத்துவிடம் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படவில்லை. இதையடுத்து, அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் வேலையிடத்திற்குத் திரும்பினார், நான் வேலைக்குச் சென்றுவிட்டு விடுதிக்குத் திரும்பிவிடுவேன், அவ்வளவுதான் என கூறினார்.

கட்டுமானப் பொறியியல் நிறுவனமான கோரி ஹோல்டிங்ஸ் போன்ற முதலாளிகள் தங்களது ஊழியர்களின் நலனை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றனர். உதாரணமாக, அவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது வேதனைகளைக் கேட்டறிய முதலாளிகள் முற்படுகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களைத் தவிக்கவிட்ட கோவிட்-19 தாெற்று!

இதேபோல், ஊழியர்களிடம் நம்பிக்கையை ஊட்ட கோரி ஹோல்டிங்ஸ் நிறுவனம் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹுய் யூ கோ, ஊழியர் சம்பளம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் குறைந்த சம்பள ஊழியர்களுக்கு 30 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் திரு சல்மான், தமது ஊழியர்களில் 35 பேர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஓய்வு நாட்களில் அவர்கள் வெளியே செல்ல முடியவில்லை. தாயகம் சென்றால் சிங்கப்பூருக்கு திரும்பிவர முடியாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுவதாக அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள், நிச்சயமற்றதன்மை ஆகிய காரணங்களால் இந்த மாதம் தமது ஊழியர்களில் ஐந்து பேர் பணியிலிருந்து விலகி இந்தியா திரும்பிவிட்டதாக சல்மான் கூறியுள்ளார். அவரது நிறுவனத்தில் பணிபுரியும் திரு பிக்ரம்ஜித் சிங்கிற்கும் அதே குழப்பம்தான். அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டிய காலத்தை நெருங்குகிறது என்றார்.

33 வயதான திரு பிக்ரம்ஜித் சிங் கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை எனது நெருங்கிய உறவினர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டனர். எனினும், நான் திருமணம் புரிய பஞ்சாப்பிற்கு திரும்பினால் அது எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் என்றாலும், இங்கு நான் பெறும் S$800 மாத சம்பளத்தை அங்கு பெற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் வேலைச் சந்தை மோசமாக உள்ளது என்றார்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 11 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு