வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதி ஆபரேட்டர்களுக்கு புதிய பயிற்சி மற்றும் கல்வித் திட்டம்..!

Singapore Foreign workers dormitories
(Photo: AFP)

தங்கும் விடுதிகளில் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர்களுக்கான புதிய பயிற்சி மற்றும் கல்வித் திட்டம் புதன்கிழமை (அக் .21) தொடங்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் ஏற்கனவே பாதுகாப்பான இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : மீண்டும் நேரடி விமானச் சேவையை குறிப்பிட்ட பகுதிக்கு தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

இருப்பினும், கூடுதலாக எதிர்கால பொது சுகாதார அபாயங்களுக்கு எதிராக மிகவும் நிலையான பாதுகாப்பை அடைய இந்த திட்டம் உதவும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த திட்டம் தங்கும் விடுதியில் உள்ள ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு சிறந்த நிர்வாக அமைப்புகளை எவ்வாறு அமைப்பது மற்றும் நடவடிக்கைகளின் இணக்கத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதைக் கற்பிக்கும்.

அதேபோல் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் என்ன சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் அது கற்பிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இன்போ கிராபிக்ஸ், சுவரொட்டிகள் மற்றும் வினாடி வினாக்கள் போன்றவற்றை தங்கள் சொந்த மொழிகளிலும், FWMOMCare செயலியிலும் அணுகலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3ஆம் கட்டத் தளர்வு அமலுக்கு வரலாம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…