“சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் தேவை முக்கியம்”

(PHOTO: Itsrainingraincoats/FB)

மற்ற வளம்மிக்க நாடுகளை போல், சிங்கப்பூர் வெகு நாட்களுக்கு அவர்களின் எல்லைகளை மூடிவைக்க இயலாது எனவும், சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தேவை எனவும் அமைச்சர் லாரன்ஸ் வோங் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக எல்லைகளை நிரந்தரமாக மூட இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழலில் உள்ள வெளிநாட்டு ஊழியருக்கு சொந்த ஊரிலிருந்து வந்த அன்பு பரிசு

ஆபத்துக்கால அடிப்படையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கோவிட் -19 தொற்றுக்கான கட்டுப்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லையை பாதுகாத்து விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதோடு தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வர இயலாது என்று கூறிய அவர், சமூக அளவில் தொற்று பரவல் இருக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், என்றார்.

வலுவான நடவடிக்கைகள் மூலம், தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்