இந்தியா செய்திகள் சிங்கப்பூர் செய்திகள்

GE2020: புதிய இந்திய வேட்பாளர்கள் இல்லாதது குறித்து பிரதமர் லீ மற்றும் அமைச்சர் சண்முகம் விளக்கம்..!

The People’s Action Party secretary-general Lee Hsien Loong and his Ang Mo Kio GRC team addressing the media at the Deyi Secondary School nomination centre .
The People’s Action Party secretary-general Lee Hsien Loong and his Ang Mo Kio GRC team addressing the media at the Deyi Secondary School nomination centre (TNP PHOTO: DESMOND FOO)

இந்த முறை புதிய இந்திய வேட்பாளர்கள் இல்லை என்றாலும் ஏற்கெனவே பல இந்தியர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என்றும் எந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெறவில்லை என்பதையும் பிரதமர் லீ சியன் லூங் சுட்டி காட்டினார்.

எத்தனை புதியவர்கள் வருகிறார்கள் என்பதைவிட மொத்தமாக எத்தனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,000ஐ கடந்தது..!

அதே போல் சொங்ஃபூ பள்ளியில் தமது குழுவினருடன் வேட்புமனுத் தாக்கல் செய்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் உதவித் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கடந்த வாரம் கூறியது போல, இந்தியர்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளது என்று தமிழ் முரசிடம் தெரிவித்துள்ளார்.

இந்த முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஓய்வுபெறவோ அல்லது வெளியேறவோ இல்லை. வெளியேறிய பிற இனத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாகத்தான் புதிய வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்களின் விகிதம் 7.5 சதவீதம், ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் 9.7 சதவீதம் என்றும், இதில் ஒதுக்கீட்டு முறை எதுவும் இல்லை. ஒரு சமநிலையைத்தான் கட்டிக்காக்க விரும்புகிறோம் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூருடன் சேர்ந்து இந்திய சமூகமும் கடந்த 5 – 6 ஆண்டுகளில் முன்னேறியுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளிலிருந்து வரும் போட்டி தொடர்ந்து கடுமையாக இருக்கும் என்பதால் அதனால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள சமூகம் தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார் என்று தமிழ் முரசு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts