‘நின்னா உடை’ , குனிந்தால் வாகனம்’ கலக்கும் பெண்ணின் உடை வடிவமைப்பு!

Singapore girl makes cardboard Transformer costume

சிங்கப்பூரில் ஒரு பெண்ணின் படைப்பு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கையால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்பெட்டியை கொண்டு மாறக்கூடிய ஒரு உடையை வடிவமைத்து உள்ளார். இரண்டு வெவ்வேறு தோற்றங்களை அந்த அட்டைப்பெட்டி உடை கொண்டுள்ளது.

Tiara Lui Rusing என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இந்த ஆடை வடிவமைப்பை பட்டியலிட்டு இருந்தார்.

தனிதிறமையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அட்டைபெட்டி ஆடை பயன்படுத்துவதற்கு இலகுவானது. இது பார்பதற்கு Backpack போன்ற தோற்றத்தில் உள்ளதால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Photo : Tiara Lui Rusing / Facebook

அந்தப் பெண் நிற்கும் பொழுது ஒரு சாதாரண உடை வடிவமைப்பு போல் தோன்றும் அந்த அட்டைப்பெட்டி, அந்த பெண் குனிந்த உடன் ஒரு சிறிய வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

இந்த உடை வடிவமைப்பு 150 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள அனைவருக்கும் பொருந்தும். சிறுவர்களுக்கு பொருந்தாது என அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.