சிங்கப்பூர் GrabFood நிறுவனத்தின் உணவு விநியோகம் செய்பவரின் மனிதநேய செயல்..!!

Singapore GrabFood feeds kitties
Photo Credit : Cats of Ayer Rajah/FB.

சிங்கப்பூரில் GrabFood நிறுவனத்தின் உணவு விநியோகஸ்தர் (Food Deliverer) ஒருவர் Ayer Rajah பகுதிக்கு உணவு விநியோகிக்க வந்துள்ளார்.

அங்கு உணவை விநியோகம் செய்த பிறகு, அந்த பகுதியில் உள்ள சில பூனைகளுக்கு அவர் உணவு கொடுப்பது போல் ஒரு காணொளி வைரலாக பரவியது.

Photo Credit : Cats of Ayer Rajah/FB.

இதையும் படிங்க : இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

இந்த காணொளி Cats of Ayer Rajah என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cats of Ayer Rajah பகிர்ந்த காணொளியின் படி, GrabFood நிறுவனத்தின் உணவு விநியோகஸ்தர் தரையில் உட்கார்ந்து பூனைகளுக்கு உணவு கொடுப்பதைக் காண முடிந்தது.

Grab guy just finish his delivery saw a few AR cats and gave them food. So sweet right.. he said where ever he delivers if he see stray he will give food before cont his job.

Posted by Cats of Ayer Rajah on Monday, 19 October 2020

முகநூலில் பகிரப்பட்ட இந்த காணொளியின் கீழ், அவர் எங்கு உணவு விநியோகிக்க சென்றாலும் அங்குள்ள பூனைகளுக்கு உணவளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

அவரின் இந்த மனிதநேய செய்யலை பாராட்டி பலர் அந்த காணொளியின் கீழ் “உங்களின் இந்த இரக்க குணத்திற்கு கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்” என்று வாழ்த்தி கருத்து (Comment) தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க : ஒரே நிமிடத்திற்குள் கிருமித்தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை – சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…