தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தடி துணை மின்நிலையம் சிங்கப்பூரில்!

(Photo: DPA)

தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தடி துணை மின்நிலையம் சிங்கப்பூரில் அமைக்கப்படுகிறது. இது ஏறத்தாழ மூன்று ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுவருவதாகவும் எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.

துணை மின்நிலையம் மற்றும் வர்த்தகக் கட்டடமும் இதற்கு முன்னர் பாசிர் பாஞ்சாங் மின்சார வட்டமாக செயல்பட்ட இடத்தில் கட்டப்பட உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்டுமானப் பணிகளையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்!

ஹியுண்டாய் இஞ்சினீரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் நிறுவனத்திற்கு 230 கிலோவாட் மின்சாரத்திற்க்கான கட்டிடத்தின் அடிப்படைக் குத்தகையை எஸ்பி குழுமம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

அலெக்சண்டிரா, கிளமெண்ட்டி, கெப்பல், பாசிர் பாஞ்சாங் மற்றும் அறிவியல் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்படும் துணை மின்நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வெப்பம் சேருவதை தடுப்பதற்காக குளிரூட்டப்படும் கருவிகள் அமைக்கப்படுவதால் துணை மின்நிலையத்தில் தீ பிடிப்பதற்கான அச்சம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படுமா?