சிங்கப்பூரில் தற்போது காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்…!

சிங்கப்பூரில் தற்போது காற்றின் தரம் காலை 8 மணி நேர நிலவரப்படி, 24 மணிநேர PSI குறியீட்டில், 103க்கும் 118க்கும் இடையில் பதிவாகி உள்ளது.

இந்த குறியீடு 100 தாண்டினால் காற்று ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது என்பதை குறிக்கும்.

சிங்கப்பூர் பகுதிகளில் பதிவாகியுள்ள காற்றின் PSI குறியீட்டு அளவு:

தெற்குப் பகுதி : 118
வடக்குப் பகுதி : 105
மேற்குப் பகுதி : 109
கிழக்குப் பகுதி : 109
மத்திய பகுதி   : 103

இந்த புகை மூட்டம் ஆனது, இந்த மாத (செப்டம்பர்) இறுதி வரை தொடரலாம் என தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளது.

You cannot copy content of this page