இந்தியா முழுவதும் மருத்துவப் பொருள்கள், இதர கருவிகள் வழங்க சிங்கப்பூர் தயார்

(REUTERS/Danish Siddiqui)

இந்தியாவில் மருத்துவப் பொருள்கள் மற்றும் இதர கருவிகள் ஆகியவற்றை வழங்கும் முயற்சிகளுக்கு உதவ சிங்கப்பூர் முன் வந்துள்ளது.

இதுபற்றி சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும் நடைமுறை மாறும் பட்சத்தில் தொழில்துறை பாதிக்கும்”

அதற்காக தேவைப்படும் போக்குவரத்து வசதிகள், தளவாட உதவிகளை சிங்கப்பூர் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Temasek அறக்கட்டளை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் செஞ்சிலுவை உள்ளிட்டவை உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் இந்தியாவுக்கு உதவ இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கணவர் உயிரிழப்பு – குழந்தையை வளர்க்க பாடுபடும் மனைவி!