சிங்கப்பூரில் 2023ம் ஆண்டு 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – MOM அறிவிப்பு

public holiday Singapore 2024

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மேலும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டு ஏழு நீண்ட வார இறுதிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

அடுத்த ஆண்டு விசாக தினத்திற்கான தேதி ஜூன் 2, 2023 என மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏழு நீண்ட வார இறுதியாக அது மாறியுள்ளது.

சோவா சூ காங்கில் கடும் விபத்து: 28 வயது ஆடவர் பலி – போதையில் வாகனம் ஓட்டிய 3 பேர் கைது

இதனை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) இன்று செப். 29 ஆம் தேதி அறிவித்துள்ளது.

முதலில் சீன-மேற்கத்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் விசாக தினம் ஜூன் 3 அன்று வரும் என்று சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு (SBF) அறிவுறுத்தியது.

ஆனால், பொதுமக்களின் கருத்தை தொடர்ந்து விசாக தினம் ஜூன் 2, 2023 அன்று வரும் என்று மற்ற சீன பஞ்சாங்கங்களுடன் SBF சரிபார்த்து இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பியுங்கள் – சிங்கப்பூர் அவரச அறிவிப்பு