சிங்கப்பூரில் Hotstar சேவை அடுத்த மாதம் முதல் அறிமுகம்..!

Singapore Hotstar Launch
Photo Credit : Hotstar

இந்தியாவின் பிரபல Hotstar நிறுவனம் அடுத்த மாதம் முதல் சிங்கப்பூரிலும் அதன் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த Hotstar செயலியின் மூலம் பல மொழி திரைப்படங்கள், நாடகத் தொடர்கள், செய்திகள், நேரடி விளையாட்டு போட்டிகள் போன்ற அனைத்தையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

மேலும், சிங்கப்பூர் ரசிகர்களுக்காக தற்போது நடந்து கொண்டிருக்கும் Dream11 IPL 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி 4 ஆட்டங்களை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த Hotstar செயலியை நேரடியாக அதன் இணையத்தளத்திலிருந்தோ அல்லது PlayStore வழியாகவோ தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான சேவை கட்டணம் ஒரு வருடத்திற்கு S$70 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த Hotstar சேவையை Apple TV, Android TV மற்றும் Google Chromecast ஆகிய தொலைக்காட்சி மூலமாகவும் பெறலாம்.

உலக தரம் வாய்ந்த Hotstar சேவையை சிங்கப்பூர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக Walt Disney நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hotstar-ல் 2,000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 900-க்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒரே நிமிடத்திற்குள் கிருமித்தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை – சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…