மலேசியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவுள்ள சிங்கப்பூர்..!

Singapore import electricity Malaysia
(PHOTO: Wallpaper Flare Website)

சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இரண்டு ஆண்டு சோதனையின் கீழ், மின்சாரம் இறக்குமதி செய்யும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) இன்று திங்கள்கிழமை (அக் .26) தெரிவித்துள்ளது.

இந்த சோதனை, சிங்கப்பூருக்கு மின்சாரம் இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு இலவச மேசை மற்றும் நாற்காலி.!

இது எதிர்காலத்தில், பிராந்தியத்தில் பெரிய அளவிலான இறக்குமதியை எளிதாக்க உதவும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றங்களை பூர்த்தி செய்ய, ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் முறையை சிங்கப்பூர் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று EMA தெரிவித்துள்ளது.

இரண்டு மெகாவாட் (மெகாவாட்) மின்சார இறக்குமதியை, இரண்டு வருட சோதனைக் காலத்திற்கு இறக்குமதி செய்வதன் மூலம், சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் சோதனை செய்யப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இது பல்வேறு நாடுகளின் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் அமைத்துள்ளது, முதலில் இதை மலேசியாவுடன் இருந்து தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

அந்த 100 மெகாவாட் மின்சார இறக்குமதிக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முன்மொழிதல் கோரிக்கையை வெளியிட EMA திட்டமிட்டுள்ளது. இது சிங்கப்பூரின் உச்ச மின்சார தேவையில் 1.5 சதவீதமாக இருக்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…