இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று!

Singapore
(PHOTO: Greg Waldron)

சிங்கப்பூரில் நேற்று 15 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

மலேசியா, மொரீஷியஸ் மற்றும் மியான்மரில் இருந்து திரும்பிய இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசியும் அதில் அடங்கும்.

சீன புத்தாண்டு: சிங்கப்பூரில் அதிகரிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்!

பிரான்சிலிருந்து வந்த சார்பு அனுமதி (Dependant’s pass) வைத்திருப்பவரும், பிரான்ஸ், இந்தியா மற்றும் UKவிலிருந்து வந்த நான்கு வேலை அனுமதி அட்டை (work pass) வைத்திருப்பவர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், மூன்று பேர் இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த வேலை அனுமதி சீட்டு (Work permit) வைத்திருப்பவர்கள், அவர்களில் ஒருவர் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்.

இந்தியாவில் இருந்து வந்த குறுகிய கால வருகை அனுமதி வைத்திருப்பவரும் அதில் அடங்குவார்.

சுமார் S$90,000க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத பாலியல் தொடர்பான மருந்துகள் பறிமுதல்!