சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!

பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை

சிங்கப்பூரில் இந்தியர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு இந்திய காவல்துறையின் சான்று தேவை என்று சிங்கப்பூருக்கான இந்திய தூரதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும், கடந்த அக்டோபர் 11 முதல் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதி ஆபரேட்டர்களுக்கு புதிய பயிற்சி மற்றும் கல்வித் திட்டம்..!

புதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அல்லாது பாஸ்போர்ட் காலாவதியாகும் முன்னரே புதுப்பிப்பு செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கும் அது பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் BLS அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை சோதனை உட்படுத்தப்பட்டு, பின்னர் இந்தியாவில் அந்தந்த மாநில/ மாவட்டத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இருந்து செய்தி கிடைக்கும்.

அந்த காவல்துறை சரிபார்ப்புக்கு பின்னர் தான் விண்ணப்பதாரர்களுக்கு சிங்கப்பூரில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சரியான முகவரி, மற்றும் சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு இந்திய தூதரகத்தின் முகவரான BLS இன் 31632615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இதையும் படிங்க : மீண்டும் நேரடி விமானச் சேவையை குறிப்பிட்ட பகுதிக்கு தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…