சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர், மிரளவைக்கும் மோட்டார் சைக்கிள் பயணம்.!

சிங்கப்பூரை சேர்ந்த மூவர் 13 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தஞ்சை பெரிய கோவிலை வந்து அடைந்தனர்.

சிங்கப்பூரை சேர்ந்த பாலச்சந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகிய மூன்று பேர் சுமார் 13000 கிலோ மீட்டர் சொகுசு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து தஞ்சை பெரிய கோவிலை வந்து அடைந்துள்ளனர்.

இந்த சவாலான பயணத்திற்கு காரணம் சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 2 நூற்றாண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இந்த நிகழ்வை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டு 3 பேர் தஞ்சை கோவிலை வந்தடைந்துள்ளனர்.

இந்த பயணம் பற்றி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை மற்ற நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளோம். மேலும், நாங்கள் சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறோம், இந்த நீண்ட தூர பயணம் மலேசியா, தாய்லாந்து, மியான்மார், பங்களாதேஷ், திபெத் மற்றும் நேபால் வழியாக இந்தியா வந்தடைந்ததாக அவர்கள் கூறினர்.

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அடுத்த பயணம் வேளாங்கண்ணி. அங்கிருந்து சென்னையில் நாளை பயணத்தை நிறைவு செய்வதாக அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் கூறினர்.

இந்த நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் 1800 CC திறன் கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.28 லட்சம் ஆகும். மேலும், ஒரு சொகுகு காரில் எவ்வளவு வசதிகள் இருக்குமோ அனைத்தும் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளதாக அவர்கள் கூறினர். இந்த மோட்டார் சைக்கிளில் AC, TV, Radio, GPRS மற்றும் கூகுள் மேப் வசதிகளும் உண்டு.