உலகளவில் உணவுப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முதலிடம்..!

While global food prices have been rising steadily over the past five years, Singaporeans can well afford food, a report on food security has found.

உணவுப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உலக அளவில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

Economist Intelligence Unit எனப்படும் வர்த்தக இணையத்தளம் அண்மையில் உணவுப் பாதுகாப்பு குறித்த உலகத் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேளாண் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி, உணவின் தரத்தை நிர்ணயிக்கும் திட்டங்கள், வேளாண் ஆய்வு மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி, ஊழலின்மை, உணவு விரயம், உணவுச் சத்துத் தரநிலை, உணவுப் பாதுகாப்பு, உணவின் விலை ஏற்றம் ஆகிய பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதில் முதலிடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது, அதை தொடர்ந்து அயர்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து மற்றும் பின்லாந்து முறையே இரண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

மேலும், பட்டியலில் 72 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளான இலங்கை (66), பாகிஸ்தான் (78) மற்றும் வங்கதேசம் (83) இடத்தில் உள்ளன.

இந்த பட்டியலில் வெனிசுலா கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.