சிங்கப்பூர் உலகின் “ஸ்மார்ட்டஸ்ட் சிட்டி” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது..!

Singapore is world's smartest city

IMD ஸ்மார்ட் சிட்டி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் சிங்கப்பூர் உலகின் ஸ்மார்ட்டஸ்ட் சிட்டி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

மொத்தம் 102 நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் இரண்டு ஆசிய நகரங்களில் சிங்கப்பூர் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. 7வது இடத்தை தைபே நகரம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த ஸ்மார்ட்டஸ்ட் நகரங்கள் முறையே; சூரிச் (இரண்டாவது), ஒஸ்லோ (மூன்றாவது), ஜெனீவா (நான்காவது), கோபன்ஹேகன் (ஐந்தாவது), ஆக்லாந்து (ஆறாவது), ஹெல்சிங்கி (எட்டாவது), பில்பாவ் (ஒன்பதாவது) மற்றும் டசெல்டோர்ஃப் (10 வது) ஆகிய இடங்களை பிடித்துள்ளன.