சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமை!

singapore Foreigners mom salary
AFP

செழுமையான சிங்கப்பூர் நாட்டின் பணியாளர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும், அடுத்த வருடத்திற்குள் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் வேலையை விடும் நிலையில் இருப்பதாகவும் பணியாளர் தேர்வு நிறுவனமான ரான்ஸ்டாட் குழுமம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

23 சதவிகித பணியாளர்கள் தாங்களை ஊக்கப்படுத்தப்படவில்லை எனவும் தங்கள் திறமைகள் சரிவர பயன்படுத்தப்படுத்துவதில்லை எனவும், மேலும் 64 சதவிகித பணியாளர்கள் அடுத்த 12 மாதங்களுக்குள் தங்கள் வேலையை விட முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக, பொருந்தார நிறுவன கலாச்சாரம், கடுமையான மேலதிகாரிகள் மற்றும் குறைந்த வசதிகளோடு அதிகம் வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தகள் ஆகியவை இருந்தன.

ஆய்வு மேற்கொண்ட நெதர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம், 14,000 பணியாளர்கள் மற்றும் வல்லுனர்களோடு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்க் காங்க், சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆதிய நாடுகளில் இயங்குகிறது.