சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்!

Photo: Business Insider

 

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (13/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகளில் உள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் வழிபாட்டு தலங்கள் உள்பட கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

ஏனெனில், மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜப்பான் நாட்டு குடிமக்கள் தாங்கள் தற்போதுள்ள நாடுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் உள்ள தனது நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், கோலாலம்பூரில் உள்ள ஜப்பானியத் தூதரகம், தென்கிழக்கு ஆசியாவில் உத்தேச பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதை உறுதி செய்தது. ஆனால் அதுபோன்ற எந்த மிரட்டலையும் தான் கண்டறியவில்லை என்று மலேசியா அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான் அரசிடம் கூடுதல் தகவலை மலேசியா அரசு கேட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை!

அதேபோல், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுத்த ஜப்பான் அரசிடம் அது குறித்து கூடுதல் தகவலைக் கோரியுள்ளது.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு காரணமாக, சிங்கப்பூரில் உள்ள ஜப்பான் குடிமக்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர்.