ஊழியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முதலாளிகள் காத்திருப்பு..!

(PHOTO:TODAY)

சிங்கப்பூரின் ஊழியர் சந்தை மீண்டும் வளர்ச்சி அடைகிறது என்றாலும் சந்தேகமான இந்த பொருளாதார நிலவரங்களைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றின் பாதிப்புகள் அதிக காலத்திற்கு இருக்கும் என்பதால் ஊழியர் சேர்ப்பில் முதலாளிகள் காத்திருந்து செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சானிடைசர் திரவம் அன்பளிப்பு

சிங்கப்பூர் மற்றும் நிரந்தரவாசிகளின் வேலைவாய்ப்பு விகிதமானது முன்பு இருந்ததைவிடவும் சற்று அதிகமாக இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வேலை பெற்ற சிங்கப்பூர் வாசிகளின் எண்ணிக்கையானது 14,900ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பலருக்கு கிடைத்த வேலை தற்காலிகமானவை இந்த வேலையை நிரந்தரமாக்குவதுதான் சவால் என்று “டிபிஎஸ்” மூத்த பொருளியல் வல்லுநர் இர்வின் சியா கூறியுள்ளார்.

இன்னும் பல துறைகளில் வேலைவாய்ப்பானது மிகவும் கணிசமாகவே இருப்பதாக பிப்பீள் வேர்ல்ட்வைட் கன்சல்டிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் வியோங் கூறியுள்ளார்.

பேருந்தின்கீழ் சிக்கிய விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!

விமான போக்குவரத்து துறைகள் இன்று வரையிலும் கொவிட்-19 பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், இன்னும் சுகாதாரபராமரிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகள் வளர்ந்து வருவதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதாகவும் டாக்டர் லியோங் கூறியுள்ளார்.

ஊழியர் சந்தை ஆர்வமூட்டும் வகையில் சமீபத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் சுகாதார பராமரிப்புத் துறைகளுடன் நிதிச் சேவைகள், இணைய வர்த்தகம் மற்றும் தளவாடப் போக்குவரத்து போன்ற துறைகளும் வளர்ச்சி அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் ஊழியர்களின் தேவை இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜலான் சுல்தான் பகுதியில் தீப்பிடித்து எரிந்த கார்!