சிங்கப்பூரில் உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் 6,370 வேலை வாய்ப்புகள்..!

singapore jobs with high salary
(Photo: Mot.gov.sg Website)

கடந்த இரண்டு மாதங்களில், உற்பத்தித் துறையில் (Manufacturing sector) வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த துறையில் அக்டோபர் நடுப்பகுதியில் சுமார் 6,370 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன, அது ஆகஸ்ட் மாத இறுதியில் 3,200ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.

எஸ்.ஜி.யுனைட்டட் வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள் (SGUnited Jobs and Skills Package) தொகுப்பின் கீழ் உற்பத்தித் துறையில் 10,400 வேலை வாய்ப்புகளில் இது 61 சதவீதமாகும்.

இதில் 2,710 பயிற்சிகள், இணைப்புகள் மற்றும் 1,330 பயிற்சி இடங்களும் அடங்கும்.

இது மனிதவள அமைச்சின் (MOM) வேலை நிலை குறித்த அறிக்கையின் 13வது பதிப்பில் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 9) தெரிவிக்கப்பட்டது.

சுமார் 4,540 வேலைவாய்ப்புகள் அல்லது சுமார் 71 சதவீதம், நிபுணத்துவம், மேலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்பம் (PMET) சார்ந்த வேலைகளும், கூடுதலாக 1,830 PMET அல்லாத வேலைகளும் உள்ளன.

பெரும்பாலான வேலைவாய்ப்புகள், எலக்ட்ரானிக்ஸ், பொறியியல் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய மூன்று துறைகளில் உள்ளன.

திருச்சி விமான நிலையத்தில் ரூ1.30 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…