சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ! – உள்ளூர்வாசிகள் பணியில் நியமனம்

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart
சிங்கப்பூரில் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைச் சந்தை மீட்சி தொடர்ந்தது.நாடுகளுக்கிடையேயான மோதல்,அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பெருந்தொற்று போன்றவற்றின் காரணமாக தொழிலாளர்களுக்கான தேவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வேலையின்மை அதிகரித்து வருவதால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.Covid-19 பெருந்தொற்று பரவலுக்கு முன்பு இருந்த சிங்கப்பூரர்கள்,நிரந்தர குடியிருப்பாளர்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10 சதவீதம் குறைவாக உள்ளது.வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் மாதங்களில் பணி நியமனங்கள் தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் செய்யத் தயங்கும் வேலைகளில்வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.எனவே,அதுபோன்ற பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏற்றம் காணும் என்று கூறப்படுகிறது.