சிங்கப்பூரில் பால் பவுடர் வாங்கியவருக்கு அடித்த அதிஷ்டம்… குலுக்கலில் S$88,888 ரொக்கப் பரிசை தட்டி சென்றார்!

lazada-grand-prize-winner-prosperity-sale

சிங்கப்பூரில் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ஒருவர் சுமார் S$88,888 ரொக்கப் பரிசை தட்டி சென்றுள்ளார்.

Lunar புத்தாண்டுக்கு முன்னர், தனது இரண்டு வயது மகனுக்கு பால் பவுடர் வாங்கிய தாய்க்கு இந்த மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்தது.

சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை… “S$16 மில்லியன் ஜாக்பாட்” – Hong Bao டிரா!

லாசாடா குலுக்கலுக்கு தகுதி பெற்று, தற்போது அந்த பரிசுத்தொகையை அவர் வென்றுள்ளார்.

கடந்த ஜனவரி 8 முதல் பிப்ரவரி 4 வரை நடந்த Lazada Prosperity Sale campaign ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இது நடந்தது. இந்த மார்ச் மாதம் லாசாடா 10வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ளது.

ஆகையால், இந்தக் காலக்கட்டத்தில் வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அவர்கள் தகுதி (குலுக்கலுக்கு) பெற்றனர்.

இந்த பெரிய ஜாக்பாட் தொகை S$88,888 வென்றவர், ப்ரிஸ்கில்லா டாங் (Priscilla Tang) என்ற வாடிக்கையாளர்.

இவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக லாசாடாவின் வாடிக்கையாளர் என்று ஆன்லைன் தளம் கூறுகிறது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி