வெளிநாட்டு ஊழியர்களையே அதிகம் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா

Photo: Getty

ஊழியர்களின் திறமை அதிகரிப்பதால் அந்த ஊழியர்க்கும், அவரது நிறுவனத்திற்குமே அது பெரும் பயனளிக்கும்.

அதிக திறமைக் கொண்ட ஊழியர்களால் அந்நிறுவனத்திற்கே பல்வேறு நன்மைகள் ஏற்படும் என லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் (லிஷா) மகளிர் பிரிவுத் தலைவி ஜாய்ஸ் கிங்ஸ்லி கூறினார்.

மற்றவர்களின் உடமைகளை போட்டோ எடுக்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

திறமையை வளர்த்துக் கொண்ட ஊழியர்களால் அதிக வேலை அல்லது நிபுணத்துவ வேலையைச் செய்ய முடியும் என்பதால், ஊழியர்கள் அதிக சம்பளம் பெற முடியும்.

அதே சமயம் நிறுவனங்களும் குறைந்த ஊழியர்களைக் கொண்டே அதிக வேலையை செய்யலாம் என்றார் திருவாட்டி ஜாய்ஸ்.

லிட்டில் இந்தியா பகுதியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், ஊழியர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் கடைகளை நிர்வகிக்கும் முதலாளிகளே சிரமப்பட வேண்டியுள்ளது.

பொதுவாக லிட்டில் இந்தியாவில் சிறிய வணிகர்களின் செயல்பாடு சற்று வேறுபட்டது. லிட்டில் இந்தியாவில் சிங்கப்பூரர்களை பணிக்கு எடுப்பது சற்று கடினமானதே. இதனாலேயே லிட்டில் இந்தியா கடைகள் அதிகமாக EP & S-Pass ஊழியர்களையேச் சார்ந்துள்ளது.

சிங்கப்பூரில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு

7 சிங்கப்பூரர்களுக்கு 1 S-Pass ஊழியரை என்ற விகிதத்தில் வேலைக்கு ஆட்கள் வைத்திருந்தபோதே மிக சிரமம். தற்போது 9 சிங்கப்பூரர்களுக்கு 1 S-Pass ஊழியர் என்ற விகிதம் ஆகிவிட்டது.

மேலும் சிங்கப்பூரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக S$1400 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாடகை மற்றும் மேற்செலவுகளுடன், ஊழியர்கள் குறைப்பாட்டையும் சிறிய விற்பனைக் கடைகள் சமாளிக்க வேண்டியிருக்கும்.

கோவிட்-19 காரணத்தால் கடை முதலாளிகளின் கையிருப்பு கரைந்து வருகிறது. இருந்தபோதிலும் அரசு உதவியாக பல்வேறு வழிகளில் தனது பங்கை ஆற்றி வருகிறது என்றார் திருவாட்டி ஜாய்ஸ்.

ஊழியர்களுக்கான தகுதி விதிமுறையில் சற்று எளிய மாற்றங்கள் செய்யலாம் அல்லது ஒட்டுமாெத்த அனுமதி அட்டை முறையையும் திருத்தி அமைக்கலாம்.

இவ்வாறு செய்தால் சிரமங்களை சந்தித்து வரும் லிட்டில் இந்தியா சில்லரை விற்பனைக் கடைக்காரர்கள் வணிகம் செய்ய பேருதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார் திருவாட்டி ஜாய்ஸ்.

தனிமைக்கான செலவு அதிகம்.. திரும்ப வர முடியுமோ.. என்ற பல கவலைகளுடன் சொந்த நாட்டுக்கு செல்ல தயங்கும் ஊழியர்கள்!