தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகும் சிங்கப்பூர்!

Singapore Little India Pongal
(PHOTO: S Ramesh Ramamirtham/FB)

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா, தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறது.

இந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட இந்திய மரபுடைமை நிலையமும் தயாராகிவிட்டது.

ஜன்னல் விளிம்பில் நின்ற சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது!

தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். இது வருடா வருடம் சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடப்படும்.

(PHOTO: Indian Heritage Centre)

வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல், ஜனவரி 17ஆம் தேதி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

பாரம்பரிய நடவு, பொங்கல் செய்முறை போன்ற நிகழ்வுகளும் இடம்பெறும் என்று அது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த பண்டிகையில், வீட்டிலிருந்தே பங்கேற்கும் வகையில் TikTok நடன சவால்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(PHOTO: Indian Heritage Centre/FB)

இதில் அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும் அது அழைப்பு விடுத்துள்ளது, அதாவது ஜனவரி 9 முதல் ஜனவரி 17 வரை இலவச அனுமதி என்றும் பேஸ்புக்கில் அது தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: Pongal Day Out 2021

திருச்சி-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…