சிங்கப்பூரில் இன்று முதல் பெரும்பாலான வேலையிடங்கள் மூடல்..!

Singapore makes decisive move to close most workplaces
Singapore makes decisive move to close most workplaces

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 7) முதல் அத்தியாவசிய சேவைகளைத் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படுகின்றன.

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று அதிகரிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், நாடு ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சிங்கப்பூர் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 15,000 கிலோ உணவை நன்கொடையாக வழங்கிய மெரினா பே சாண்ட்ஸ்..!

பெரும்பாலான வேலையிடங்களை மூடல் மற்றும் முழுமையாக வீட்டில் இருந்து கற்றல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

இதில் உணவுக் கடைகள், பேரங்காடிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பொதுப் பயனீட்டுச் சேவைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிச் சேவைகள் ஆகிய அத்தியாவசியச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பொருளியல் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும். மேலும் அத்தகைய துறைகளில் செயல்படுவோர் தொடர்ந்து வேலைக்குச் சென்றாலும், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும், தங்கள் வீட்டுக்கு வெளியே மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சாத்தியம் என்றால், வீட்டிலிருந்து வேலைபார்க்கவும், மேலும் இந்த புதிய நடவடிக்கை அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 66 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!